பொன்னாங்கண்ணி கீரையில் இவ்வளவு நன்மைகளா?
benefits of ponnanganni keerai
வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தக் கீரை வகைகளில் மிகவும் சிறந்தது பொன்னாங்கன்னி கீரை. இதன் மருத்துவ பலன்களை இந்த பகுதியில் காண்போம்.
* உடல் எடை குறைக்க பொன்னாங்கன்னி கீரை மிகவும் உதவுகிறது. இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
* இதேபோல், பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும். எலும்புகள் உறுதியாகும்.
* இந்தக் கீரையை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் போகும். இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.
* பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கீரையை 27 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும்.
* பொன்னாங்கண்ணி கீரையை சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.
* இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படும். இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட வேண்டும்.
* தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது பொன்னாங்கன்னி கீரை. இந்த கீரையை சாப்பிட்டால் உடல் அழகு மேம்படும்.
English Summary
benefits of ponnanganni keerai