அளவில்லா ஆரோக்கியமான நன்மைகளை தரும் முள்ளங்கி.!
Benefits of radish vegetable
உணவு பொருட்களில் அத்தியாவசிய காய்கறி தான் முள்ளங்கி. அதன்படி முள்ளங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முள்ளங்கியை சாலட் அல்லது சாம்பாராக வைத்து சாப்பிடலாம். எனவே முள்ளங்கி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
முள்ளங்கியில் வைட்டமின் பி, கே, சி, பொட்டாசியம், நார்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதயத்தை பலப்படுத்தும் அந்தோசியன் என்ற சத்து முள்ளங்கியில் நிறைந்துள்ளது.
முள்ளங்கியை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது மாவு சத்து நன்றாக கிடைக்கிறது. இது செரிமானத்தை சீராக்கிறது.
முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. மேலும் சிறுநீரக கற்கள் பிரச்சினைகள் அவதிப்படுபவர்களுக்கு முழு நிவாரணம் தருகிறது. அதன்படி முள்ளங்கியை நன்றாக வேக வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.
முள்ளங்கி சாப்பிடுவதால் மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி குடலை சுத்தம் செய்கிறது. மேலும் கல்லீரலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
முள்ளங்கி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. மேலும் ரத்த அழுத்தம் சீராகி இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
English Summary
Benefits of radish vegetable