பாலில் துளசி கலந்து குடிப்பதால் என்ன பயன்? - Seithipunal
Seithipunal


நறுமண மூலிகையான துளசி இலையை தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் சூடான பாலில் போட்டு, அதனுடன், தேன் கலந்து குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், சளி, இருமல் உள்ளிட்டவற்றில் இருந்து குணப்படுத்த உதவுகிறது.

* துளசி செரிமான நொதிகளை உற்பத்தி செய்வதால், அஜீரண கோளாறுகளான வாயுப்பிடிப்பு, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை போக்க உதவும்.

* துளசியில் அமைதிப்படுத்தும், தளர்வை அளிக்கும் பண்புகள் இருப்பதால், நரம்பு மண்டலத்தை அமைதி அடைய, மன அழுத்தத்தை குறைப்பதோடு, மனசோர்வை போக்க உதவுகிறது.

* துளசி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமன் செய்ய உதவுகிறது.

* துளசியில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. 

* இந்தத் துளசி தலைவலி, மாதவிடாய் சுழற்சி பிடிப்புகள் மற்றும் தசை வலிக்கு நிவாரணியாக செயல்படுகிறது.

* துளசியில் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை எதிர்ப்புபண்புகள் உள்ளது. இது வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன், ஈறு பிரச்னைகளில் இருந்து காக்க உதவுகிறது.

* துளசி முகப்பரு போன்ற சரும பிரச்னைகளுக்கு எதிராக செயல்படுவதுடன், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of tulasi mixed milk


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->