தினமும் நெய்யை உணவில் சேர்த்து கொண்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?
Benifits Of ghee
பெரும்பாலனா இந்திய உணவுகளில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் நெய் பயன்படுகிறது. தினமும் உணவில் நெய்யை சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
நெய்யை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் அமில சுரப்புக்கு வழி செய்து ஜூரண உறுப்புகளை விரைவாக வேலை செய்ய வைக்க உதவுகிறது.
நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாக்கவும் உதவும்.
நெய் சேர்த்து சமைத்த உணவுகளை சாப்பிட்டு வர பசி உணர்வை கட்டுப்படுத்தும். மேலும், எலும்புகளை வலுவாக்க உதவும்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 112 கலோரிகள் இருக்கிறது. 0.04 கிராம் புரதம், ஏ, டி, கே போன்ற வைட்டமின்கள், 45 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், 2.7 மில்லி கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.