கோடைக்கு ஏற்ற பழைய சாதம் - இத்தனை நன்மைகளா?
benifits of pazhaiya satham
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால், மக்கள் தங்களது உடல்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று பழையசாதம். இந்த பழைய சாதத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* பழைய சாதத்தை நாம் சாப்பிடுவதால், வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரிசி உணவுகளை விட அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை பெற முடியும். வேகவைத்த சாதத்தை குறைந்தது 12 மணி நேரம் நொதிக்க வைக்கும்போது, வழக்கமாக சாதத்தில் கிடைக்கும் இரும்புச் சத்தின் அளவை விட 21 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும்.
* கொதிக்க வைக்கப்பட்ட பழைய சாதத்தில் அதிகப்படியான அளவு வைட்டமின் டி உருவாகிறது. இது அதிகப்படியான உடல் சோர்வை தீர்ப்பதோடு வயிற்றில் அமிலத் தன்மையும், வாயுவும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கச் செய்யும்.
* இதில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது. சாதத்தை நெதிக்க வைக்கும்போது அதில் ஏராளமான நுண்ணுயிரிகளும் நுண்ணூட்டச்சத்துக்களும் உற்பத்தி ஆகின்றன. இவை நம்முடைய உடலின் பிஎச் அளவை மேம்படுத்துவதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
*பழைய சாதம் மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. குடல் இயக்கங்கள் சீராக இருப்பதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். பழைய சாதத்தில் அதிக அளவிலான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
* இந்த பழைய சாதத்தில் இருந்து நாம் அதிகப்படியான செலீனியம் மற்றும் மக்னீசியத்தை பெற முடியும். இவை இரண்டுமே நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகின்றன. இப்படி பல நன்மைகளைக் கொண்ட பழைய சாதத்தை தினமும் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
English Summary
benifits of pazhaiya satham