புற்றுநோய்க்கு மருந்தாகும் அதிசய பூ - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பலர் புற்று நோயின் தீவிரத்தால் உயிரிழந்தும் போகின்றனர். இந்த கொடிய புற்றுநோய்க்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கவில்லை. 

அதனால், பல்வேறு ஆய்வியலாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த புற்று நோயை அழிக்கும் மருந்தாக செவ்வந்தி பூ பயன்படுகிறது என்று பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இந்த பூவை பயன்படுத்தி புற்று நோயாளிகளை பாதிக்கும் லுக்கேமியா செல்களை முழுவதுமாக அழிக்க மருந்துகளை உருவாக்கலாம். அதாவது, செவ்வந்தி பூவின் இலைகளில் பார்த்தினோலைடு என்ற வேதிப்பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பூ ஒற்றைத் தலைவலி மற்றும் பிற உடல் வலிகளுக்கும் 100 ஆண்டுகளுக்கு மேலாக மருந்தாக பயன்படுத்தப்பட்டு வரும் அதிசய பூவாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த பூவை பயன்படுத்தி எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்று நோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். 

இந்த சோதனை வெற்றிகரமாக முடிவுக்கு வந்து எலும்பு மஜ்ஜை புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தின் அடுத்த கட்ட பரிசோதனைக்கு பிறகு மனிதர்களுக்கு தரப்படும் என்று ஆய்வியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cancer medicine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->