மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களா? - ஒரே ஒரு பேரிச்சம் பழம் மட்டும் போதும்.!
Date fruit benifits
பழ வகைகளில் ஒன்று பேரிச்சம் பழம். பல்வேறு சத்துக்களைக் கொண்ட இந்தப் பேரிச்சம் பழத்தை தினமும் காலையில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நிலையில், வெறும் வயிற்றில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பேரிச்சம் பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுக்கோஸ் உள்ளிட்ட இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. இதனால் காலையில் பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்வதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்கள், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரும்போது இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்து செரிமானத்தை சீர்படுத்துகிறது.
பேரிச்சம்பழத்தில் காணப்படும் அதிகப்படியான சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துவதுடன் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதனால், தினமும் காலையில் ஒரு பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்களை சரி படுத்தி நோயில்லா வாழ்க்கையை வாழலாம்.