இந்த அறிகுறியெல்லாம் உங்களுக்கு இருக்கா... அப்போ "டேக் கேர்".. அது 'இந்த' பிரச்சினையாக இருக்கலாம்...!!
Do You hve These Symptoms Then Take Care You might have These Problem
இன்றைய காலக் கட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கங்களால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒரு உடல்நலப் பிரச்சினையாக இருக்கும் அல்சர் பற்றி இங்கு காண்போம்.
இந்த அல்சர் வருவதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது அதிக காரமான, புளிப்பான, மசாலா நிறைந்த, எண்ணையில் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, காஃபி, டீ, மதுபானங்கள் அதிகளவில் அருந்துவது, மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது இரைப்பையில் புண் ஏற்பட வழிவகுக்கின்றன.
மேலும் தூக்கமின்மை, மனக்கவலை, எப்போதும் பரபரப்பாக இருப்பது, அதிகம் கோபப் படுவது ஆகியவையும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. மேலும் உணவை தவிர்ப்பதும், நேரம் தவறி சாப்பிடுவதும் கூட அல்சருக்கு காரணமாகின்றன.
இதன் அறிகுறிகள் " நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல், புளித்த ஏப்பம், பசியற்ற தன்மை, வயிற்று வலி, குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக இரைப்பை நிபுணரை சந்தித்து எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே சரி செய்யாமல் விட்டால் அது புற்று நோயாக மாறும் வாய்ப்பு அதிகம்.
துரித உணவுகளைத் தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை பின்பற்றுவதன் மூலமும், மருந்து மாத்திரைகள் மூலமும் இந்த அல்சர் பிரச்சினையை சரி செய்து விடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மேலும் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு யோகா செய்யலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Do You hve These Symptoms Then Take Care You might have These Problem