அஜித், விஜயை தூக்கி சாப்பிட்ட சிவகார்த்திகேயன்.! என்ன சாதனை செய்தார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். 

இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடப்பட்டது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகியது.

கடந்த மே 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகிய இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் தற்போது டான் படம் நூறு கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்துள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய சாதனை செய்துள்ளார்.

இதுவரை அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கூட அறிமுக இயக்குனரின் படத்தில் இந்த அளவிற்கு ஹிட் கொடுத்தது இல்லை என்றும் அதை சிவகார்த்திகேயன் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Don movie collection achievement 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->