மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளீர்களா நீங்கள்..? இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் 'தண்ணீர்' போதும் ..!! - Seithipunal
Seithipunal



இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது நமக்கு பல்வேறு நன்மைகளைத் தரும். அதே சமயம் சில தீமைகளையும் ஏற்படுத்தும். இதுகுறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். 

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :


* தூங்குவதற்கு முன் அளவாக தண்ணீர் குடிப்பது உங்களை நன்றாக தூங்க வைக்கும். 

* பகலில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி மற்றும் பிற வேலைகளால் உங்கள் தசைகளில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம், இரவில் தண்ணீர் குடிப்பதால் சிறிது தளரும். 

* உடலைத் தளர்வாக்கி நல்ல ஆழமான தூக்கத்திற்கு சூடான மூலிகை தேநீரோ, அல்லது இளநீரோ குடிக்கலாம். 

மன அழுத்தம் நீங்கி நிம்மதியான தூக்கத்தைப் பெற தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிக்கலாம். 

தீமைகள் :

* அதிகளவில் தண்ணீர் குடித்தால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதாக இருக்கும். 

* இரவு நேரத் தூக்கம்  பாதிக்கப் படுவதால் கண் எரிச்சல், களைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பகலில் சந்திக்க நேரிடும். 

* தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் பிரச்சினை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் சுவாசக் குழாய் வீங்கி, சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விடும். 

* இரவில் தான் நம் உடலில் நச்சு நீக்கம் நடைபெறும். எனவே அதிகப்படியான தண்ணீரை இரவில் குடித்தால் உடலின் இந்த நச்சு நீக்க வேலையில் தடை ஏற்படும்.

* தண்ணீர் குடித்தவுடன் படுக்க கூடாது. இதனால் வயிற்றில் சுரக்கும் அமிலம், உணவுக் குழாயில் பாயும் அபாயம் உள்ளது. 

* இரவு தாகம் எடுத்தால் மட்டுமே அதுவும் தூங்குவதற்கு ஒரு 30 நிமிடங்கள் முன்பு வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drink Water Before Sleep For Stress Relief


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->