மாரடைப்பை தடுக்க வேண்டுமா? அப்போ இந்தக் காயை மட்டும் சாப்பிடுங்க.! - Seithipunal
Seithipunal


காய்கறி வகைகளில் ஒன்று முருங்கைக்காய். இதில், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, புரத சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பதால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் நன்றாக செயல்பட உதவுகிறது. அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* முருங்கைக்காயில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் உள்ளதால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நோயின் பாதிப்பை குறைக்கிறது.

* தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பு தான் காரணம். இந்தக் கெட்ட கொழுப்புகளை முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் குறைக்கிறது. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

* அது மட்டுமல்லாமல் இதில், வைட்டமின் ஏ, போலிக் அமிலம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படும் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தோலில் ஏற்படும் புண்கள் போன்ற பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், சரும பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drumstick benifits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->