நெய்யுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட வேண்டும்? இதோ லிஸ்ட் தயார்.!
ghee benefits
சமையலில் மணத்தை தரும் பொருட்களில் ஒன்று நெய். இந்த நெய்யில் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்று இதனை அனைவரும் சாப்பிடாமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால், இது உண்மையல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, நெய்யுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க செய்கிறது. அதனால், எந்தெந்த பொருட்களுடன் நெய் கலந்து சாப்பிட்டால் அதிக நன்மைகளைத் தரும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* இலவங்கப்பட்டையில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியா நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்க செய்கிறது.
* முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் சில இலவங்கப்பட்டையை சேர்த்து, நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் வரை சூடாக்கி, தீயை அணைத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.
* மஞ்சளை நெய்யுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலில் அனைத்து விதமான வீக்கமும் குறைகிறது. முதலில் ஒரு கிண்ணத்தில் நெய், மஞ்சள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் சேமித்து பயன்படுத்தவும்.
* ஒரு பானையில் நெய்யுடன் சிறிது துளசி இலைகளைச் சேர்த்துப் பயன்படுத்தவும். காரணம் துளசி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். மேலும், பார்வையை மேம்படுத்தும்.