உங்களுக்கு பளபளப்பான கூந்தல் வேண்டுமா..?! அப்போ 'இந்த' பொருளை யூஸ் பண்ணுங்க..!! - Seithipunal
Seithipunal


உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளே போதும். கற்பூர மரத்தில் இருந்து பெறப்படும் வாசனை நிரம்பிய கற்பூரம் தான் அது. 

கற்பூர எண்ணெய் :

தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன், சில துளிகள் கற்பூர எண்ணெய் கலந்து உங்கள் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் :

லேசாக சூடுபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணையுடன் சிறிது கற்பூரத்தை சேர்த்து உருக்கி, அதை உங்கள் உச்சந் தலையில் தடவவும். இந்த கலவை தலைமுடியை வலுப்படுத்துவதோடு, மென்மையாகவும் பராமரிக்க உதவுகிறது. 

கற்பூரத்துடன் கற்றாழை :

கற்றாழை ஜெல்லுடன் சிறிது கற்பூரத்தை தூளாக்கியோ அல்லது சில துளிகள் கற்பூர எண்ணெய் விட்டோ கலக்கி, உங்கள் தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியை அலச வேண்டும். இது உங்கள் கூந்தலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். 

கற்பூரம் மற்றும் தயிர் :

தயிருடன் கற்பூரத்தை தூளாக்கி கலந்து, தலைமுடியில் தடவி, 30 - 45 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். இதனால் முடி மென்மையாவதோடு, பளபளப்பாகவும் மாறும். 


எச்சரிக்கைகள் :

* கற்பூரம் காரத் தன்மை வாய்ந்தது என்பதால், அது எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதை நேரடியாக உபயோகிக்காமல் வேறு சில பொருட்களுடன் கலந்தே உபயோகிக்க வேண்டும். 

* கற்பூரத்தை உபயோகிப்பதற்கு முன் ஒவ்வாமை ஏற்படுகிறதா எனபதை தெரிந்து கொள்ள முதலில் சிறிது பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hair Care Tips


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->