விபரீதம்! தனக்குத்தானே ஆப்ரேஷன் செய்ய முயன்ற வாலிபர்...! யூடியூப் பார்த்து செய்த கொடூரம்....!
he committed to perform an operation on himself after watching YouTube
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆக்ராவை அடுத்த மதுராவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ராஜபாபு.இவர் திருமண மண்டபம் நடத்தி வருகிறார்.
இவருக்கு சில நாட்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.மருத்துவமனைக்கு சென்றும் தீர்வு கிடைக்காததால் அவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதற்காக யூடியூப் மற்றும் ஆன்லைனில் வரும் வயிற்று வலி சம்பந்தமான குறிப்புகளை தேடி கண்டுபிடித்து, அதில் ஆபரேஷன் செய்யும் வீடியோக்களையும் பார்த்துள்ளார் .பிறகு அவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்ய திட்டமிட்டு,ஆபரேஷனுக்கு தயாரான அவர் தனது வீட்டிலுள்ள ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு ஆபரேஷன் செய்ய முயன்றார்.
தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டு ஆபரேஷன் செய்யும் கத்தியால் தனது வயிற்றில் வலது புறம் 7 செ.மீ. அளவிற்கு கீறினார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஆபரேஷன் கத்தி ஆழமாக சென்றதால் அவருக்கு வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது.இதனை சரி செய்ய முயன்ற ராஜபாபு அந்த இடத்தை தானே தைத்து 10-12 தையல்களையும் போட்டுள்ளார்.
தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது காரணமாக பயந்து போன அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ராஜபாபு சரிந்து கிடப்பதையும் வயிற்றில் கீறல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆபத்தான நிலையிலுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.யூடியூப் பார்த்து தனக்கு தானே வாலிபர் ஆபரேசன் செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.இது தற்போது இணையதளத்திலும் வைரலாகி வருகிறது.
English Summary
he committed to perform an operation on himself after watching YouTube