தொடை சதையை குறைக்க., இந்த நீரை குடித்தால் போதும்.!
health benefits of pot tamarind water
நாம் சமையலில் பயன்படுத்தும் சாதாரண புளிக்கு பதிலாக மலபார் புளி அல்லது குடம்புளி பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இது ஒரு உணவாக மட்டுமல்லாமல் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இந்தக் குடம்புளியை சிறிதளவு எடுத்து ஒரு கப் நீரில் ஊற வைத்து அந்தச் சாறை எடுத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
இதனைத் தொடர்ந்து குடித்து வர உடலிலிருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உடல் எடை விரைவில் குறைய உதவி புரிகிறது. இதனை குடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல மாற்றங்களை உணரலாம்.
குடம்புளியில் அதிகமாக இருக்கக்கூடிய ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் இதய பாதிப்பு வராமல் காக்கிறது. மேலும் இவை எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதுஎன பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடம்புளி கலந்த தண்ணீர் தேவையற்ற பசியை போக்க செய்கிறது. பசியைக் குறைக்கிறது. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதில் சிறந்தது தொடை மற்றும் தொப்பையைச் சுற்றியுள்ள கொழுப்புகள் அதிகமாக சேருவதையும் தடுக்கிறது.
குடம்புளி டைப் 2 நீரிழிவிற்கு ஒரு சிறந்த மருந்தாகும். இது இன்சுலின் உணர்வுதிறனை அதிகரிக்க உதவுகிறது. செல்கள், தசைகளுக்கு குளுக்கோஸின் ஓட்டத்தை எளிதாக்குகிறது மற்றும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.
இதில் இருக்கக்கூடிய எச்.சி.ஏ என்னும் வேதிப்பொருள் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஹார்மோன்களின் சமநிலையின்மையை சரி செய்ய உதவுகிறது.
English Summary
health benefits of pot tamarind water