அறுசுவை சமையலின் ஆழமான ரகசியம் என்ன?.. உலகமே வியந்து பார்க்கும் உணவுமுறைகள்.! - Seithipunal
Seithipunal


இந்திய சாப்பாட்டு வகைகளில், ஏன் உலக சாப்பாட்டு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் தமிழ் மக்களின் அறுசுவை உணவுதான். வந்தாரை அன்போடு அழைத்து இனிப்பில் ஆரம்பித்து, கசப்பு, புளிப்பு, காரம் என அனைத்து விதமான சாதங்களையும் அன்போடு பரிமாறும் உணவில் உள்ள ரகசியம் குறித்து தான் இன்று காணவுள்ளோம். 

பொதுவாக வீடுகளாக இருந்தாலும் சரி, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இல்லங்களாக இருந்தாலும் சரி சாதத்திற்கென தனியொரு மதிப்பு உள்ளது. சாம்பார், ரசம், கூட்டு, அவியல், பொரியல், காரக்குழம்பு, மோர் என உணவு வயிறுமுட்ட சாப்பிட்டு அதனை செரிக்கவும் வைக்கும் அளவில் நமது பாரம்பரிய வரிசைகள் உள்ளது. 

அந்த வகையில், அறுசுவையில் காரம் நமது உடலின் உஷ்ணத்தை கூட்டுவது மட்டுமல்லாது உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் உதவி செய்கிறது. காரத்தை பொறுத்த வரையில் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் கடுகு போன்றவற்றை கூறலாம். 

கசப்பு சுவை உடலில் இருக்கும் தேவையற்ற கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்க உதவி செய்கிறது, இதனைப்போன்று சளியை கட்டுக்குள் வைக்கும் குணமும் கொண்டது. கசப்பு சுவை உள்ள காய்கறிகளாக பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், வேப்பம் பூ, ஓமம் போன்றவை உள்ளது.

இனிப்பு உடலின் தசையை வளர்த்து, வாதத்தினை அதிகரிக்கிறது. பழ வகைகள், உருளைக்கிழங்கு, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றில் இனிப்பு சுவை உள்ளது. புளிப்பு சுவையால் உடலின் இரத்த குழாய் அழுக்குகள் நீக்கப்படுகிறது. புளிப்பு சுவையும் வாதத்தை கூட்டும்.

புளிப்பு சுவை உள்ள எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் ஆகியவை உள்ளது. துவர்ப்பு சுவை இரத்தம் வெளியேறும் பிரச்சனையை குறைத்து, காயம் ஏற்பட்டால் இரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கும். 

துவர்ப்பு சுவைக்கு வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள் மற்றும் அவரைக்காய், அத்திக்காய் போன்றவற்றை கூறலாம். இதனைப்போன்று உப்பு இல்லாத உணவுப்பொருள் கிடையாது, உப்பில்லாத சாப்பாடு குப்பையில் என்பதை போல, முக்கிய தேவையான உப்பு நியாபக சக்தியை அதிகரிக்கும். ஆனால், உப்பு அதிகரித்தால் உடலில் வீக்கம், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. உப்பு கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Tips of Arusuvai Samayal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->