பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கர்மபூமியில் அகழாய்வு பணிகள் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் துவாரகை கடல் பகுதியில், இந்திய தொல்லியல் துறையினர் புதிய அகழாய்வுப்பணியை தொடங்கியுள்ளனர்.

இங்கு கடந்த 2005 முதல் 2007 வரை அகழாய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன்பிறகு, 18 ஆண்டுகளாக எந்த அகழாய்வும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.,) ஆழ்கடல் அகழாய்வை தற்போது ஆரம்பித்துள்ளது.

தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அலோக் திரிபாதி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகை கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளைத் தொடங்கியதாக கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு முதன்முறையாக அபராஜிதா சர்மா, பூனம் விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்பினா போன்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், குஜராத் கடல் பகுதியில், கோமதி க்ரீக்கிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் உள்ள துவாரகை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கர்மபூமி என்று பக்தர்கள் போற்றுவைத்து குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deep sea excavation work begins in Dwarka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->