மகா கும்பமேளாவில் தமிழக பெண்கள் மாயம் - தீவிர கண்காணிப்பில் போலீசார்.!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 

இந்த நிகழ்வு மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரைக்கும் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளாவுக்கு செல்ல திட்டமிட்டு, காசிக்கு ரெயில் மூலம் யாத்திரை சென்றனர். அதன் படி இந்த குழுவினர் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.

கும்பமேளா சென்ற இரண்டு தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உத்தரபிரதேச காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two tamilnadu womens missing in uttar pradesh maha kumbamela


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->