அண்ணாசாலையில் எந்த இடத்திற்கு வரணும்? - உதயநிதிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை.!
tamilnadu bjp leader annamalai answer to deputy cm uthayanithi
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பிரச்சினையை திசை திருப்ப அண்ணாமலை எதை எதையோ உளறி கொண்டு இருக்கிறார். தனியார் பள்ளி நடத்துபவர்களை பாஜக தலைவர் விமர்சிப்பதே தவறானது.
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசிடம் பேசி பாஜக தலைவர் அண்ணாமலை வாங்கி தரச் சொல்லுங்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக அண்ணாமலை சொன்னார்; தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வாங்க என்று சவால் விடுத்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "அண்ணாசாலையில் எங்கு வர வேண்டுமென்று கூறுங்கள். அங்கு வருகிறேன். அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொன்னால் தனியாக வருகிறேன். திமுகவினர் அனைத்து படைகளையும் திரட்டி வரட்டும்.
கல்விக்கு கொடுக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது. தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும். நாளை காலை 6 மணி முதல் "கெட் அவுட் ஸ்டாலின் " என்பதை டிரெண்டாக்க உள்ளோம்.
திமுக ஐடி விங்கிற்கு ஒருநாள் அவகாசம் தருகிறோம். என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். தமிழகத்தில் செயல்படும் ஆங்கில வழி பள்ளிகளிலேயே தமிழ் இல்லை" என்று தெரிவித்தார்.
English Summary
tamilnadu bjp leader annamalai answer to deputy cm uthayanithi