யாரையோ வெற்றி பெற வைக்க அமெரிக்கா ஏன் நிதி வழங்க வேண்டும்..? இந்தியாவுக்கு நிதி தொடர்பில் ட்ரம்ப் கருத்து..!
Why should the US provide funds to make someone win
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசு நிர்வாகத்தில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதில் ஒன்று அமெரிக்க அரசின் செயல்திறன் துறை டி.ஓ.டி.ஜி.இ. (DODGE). இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் அதிரடியான வேலையை செய்கிறது. DODGE குழு இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது.

இது குறித்து டிரம்ப் அவர்கள், 'அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் நிதி தர வேண்டும்? என்றும் கூறியிருந்தார்'.
இந்நிலையில், அமெரிக்காவின் மயாமி நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். அங்கு அவர் இது குறித்து அவர் கூறியதாவது;-

"இந்திய தேர்தல்களுக்காகவும், வங்காளதேசத்தில் அரசியல் சூழலை சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆசியா ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாம் பணம் கொடுக்க தேவையில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும். அங்கு வேறு யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச வேண்டும்." இவ்வாறு டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Why should the US provide funds to make someone win