இந்த அறிகுறி எல்லாம் இருந்தா உஷார்... உங்களுக்கு மாரடைப்பு வரலாம்.!
Heart attack symptoms
கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் இதயத்திற்கு ஆபத்து இருக்கலாம்.
மார்பில் வலி இருக்கும். அல்லது அழுத்தம் உள்ளிட்டவற்றை அனுபவித்தால் இது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் இந்த மாதிரி அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.
நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் குமட்டல் உள்ளிட்டவை ஏற்பட்டு வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனையும் இருந்தால் இது மாரடைப்பிற்கான காரணம் இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவமனையில் சென்று பரிசோதிக்க வேண்டும்.
கை வலி இதய நோயின் அறிகுறியாக இருக்கக்கூடும் உடலின் இடது பக்கத்தில் கீழ்நோக்கி பரவுகின்ற இந்த வலி மார்பிலிருந்து கை தசைகளை நோக்கி நகரும் போது இது இதய நோயின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்டவை பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடியது தான். ஆனால் மூச்சி திணறலுடன் கூடிய மயக்கம் ஏற்பட்டால் இது சற்று தீவிரமான ஒரு விஷயம்.
தாடை அல்லது தொண்டையில் வலி ஏற்படக்கூடும். மார்பு வலி ஏற்பட்ட பின் அந்த வலி தொண்டை, தாடை பகுதியில் பரவலாம். எனவே இது மாரடைப்பை குறைக்கக்கூடிய விஷயம்.
படிக்கட்டில் ஏறும் போது அல்லது மளிகை பொருட்களை எடுத்துச் செல்லும் போது மிகவும் சோர்வாக இருந்தால். அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் இது விவரிக்க முடியாத பலவீனம் குறிப்பாக. இதுபோன்ற சோர்வு பெண்களுக்கு அதிகம் இருக்கும்.
தூங்கும் போது குறட்டை விடுவது சாதாரணமான விஷயம்தான். ஆனால் மூச்சு திணறலின் அறிகுறியாக இந்த குறட்டை இருக்கும் அப்படி தூங்கும் பொழுது குறட்டை ஏற்பட்டு சுவாசம் தடைபடும். இது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அசாதாரணமான வியர்வை மாரடைப்பை குறிக்கும். மேலும், உடல் உறுப்புகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காரணமின்றி ஏற்படும் வீக்கம் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இதயத்துடிப்பு சீராக இருக்காது பொதுவாக பதற்றமாக இருந்தால் இதுபோல இருக்கும். ஆனால் எந்த பதற்றமும் இல்லாமல் திடீரென இதயம் வேகமாக துடித்தால் இது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும்.