முகத்தில் ஏற்படும் பருக்களை வராமல் தடுப்பது எப்படி.?
How to avoid pimples in face
முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் முகத்தில் மஞ்சள் பூசுவது ஆரோக்கியமானது என பழங்காலம் முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போதைய காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசுவது தவிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பூசுவதால் முகத்தில் பருக்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே முகத்தில் மஞ்சள் பூச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் இயற்கையாக வளர்ந்த மஞ்சள் கிழங்கைதான் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் நிறைந்த மஞ்சள் பூசினால் பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே முகத்தில் முகப்பருக்கள் வந்து விட்டால் பருக்களை அழுத்தவோ, கிள்ளவோ கூடாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதுட்டுமில்லாமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயன சோப்புகளை அறவே பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள், நெய், வெண்ணெய், கேக், சாக்லேட் போன்றவற்றையும் சாப்பிட்டால் முகப்பரு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது எனவே அதனை தவிர்த்தால் நல்லது.
முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் சாப்பிட்டால் முகப்பருக்கள் வராது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
How to avoid pimples in face