சுவையான முருங்கை கீரை பொறியலை வீட்டிலேயே செய்வது எப்படி?.! உடலுக்கும் உள்ளத்துக்கும் அதிசக்தி.!!
how to cook murungai keerai poriyal in home
நாம் இன்றுள்ள காலகட்ட நிலையில்., பல்வேறு விதமான கால சூழ்நிலையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனால் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் உணவு பொருட்களை சமைத்து சாப்பிடுவது நல்லது. அந்த வகையில்., உடலின் சக்திக்கும்., மன வலிமைக்கும் சக்தியை வழங்கும் முருங்கை கீரை செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 1 கட்டு.,
நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கிண்ணம்.,
காய்ந்த மிளகாய் - 5 எண்ணம் (Nos).,
கடுகு - ½ தே.கரண்டி.,
மஞ்சள்தூள் - ½ தே.கரண்டி.,
கல் உப்பு - தே.அளவு.,
தேங்காய் துருவல் - ½ கிண்ணம்.,
நல்லெண்ணெய் - 5 தே.கரண்டி....
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட முருங்கை கீரையை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு., காய்ந்த மிளகாய்., வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரும் வதக்கி கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் கீரையை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு., தண்ணீரை ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். கீரை நன்றாக வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முருங்கை கீரை பொறியல் தயார்....
English Summary
how to cook murungai keerai poriyal in home