உங்கள் காதில் 'தண்ணீர்' புகுந்து விட்டதா? அப்போ உடனே இதை செய்யுங்க..!! - Seithipunal
Seithipunal



நாம் குளிக்கும் போதோ அல்லது மழையில் நனைய நேரிட்டாலோ சில நேரங்களில் நமது காதுகளுக்குள் தண்ணீர் சென்று விட வாய்ப்புண்டு. அப்படி நம் காதுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதை வெளியேற்ற உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம். 

காதில் தண்ணீர் புகுந்தால் முதலில் தலையை சாய்த்து தண்ணீரை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். எந்த காதில் தண்ணீர் புகுந்ததோ அந்த பக்கம் கீழாக தலையை சாய்க்க வேண்டும். பிறகு ஒரு மென்மையான துணியினால் காதின் துளையை துடைக்க வேண்டும். 

இதையடுத்து ஹேர் ட்ரையர் போன்ற நீரை உலர்த்தும் கருவியை குறைந்த வெப்ப நிலையில் வைத்து காதின் துளையை சூடாக்க வேண்டும். இந்த முதலுதவியின் மூலம் காதில் தண்ணீர் புகுந்தது சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். 

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே காதுக்குள் எந்த ஒரு சொட்டு மருந்தையோ, எண்ணையையோ காதில் விட வேண்டாம். ஏனெனில் அவை காதுகளுக்குள் ஏதேனும் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.  

எப்போதும் காதுகளை சுத்தம் செய்ய கூர்மையான குச்சி போன்றவற்றை உபயோகிக்க கூடாது. மேலும் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் கூடாது. குளிக்கும் போது காதுகளில் தண்ணீர் செல்வதை தடுக்க காது அடைப்புகளை  பயன்படுத்திக் கொண்டு குளிக்கச் செல்ல வேண்டும். 

மேலும் எப்போதும் காதுகளை ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்திருக்க வேண்டும். இதற்காக ஹீட்டிங் பேடையும் உபயோகிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Protect Your Ears If Water Goes Inside


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->