கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களுக்கு தீர்வாகும், நாக்கை நிறம் மாற்றும் பழம்.. இன்றே சாப்பிடுங்கள்.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட நிலையில் உடலுக்கு சத்தான உணவுகளை உண்ணுவது அவசியம். இதனைப்போன்று உடலுக்கு நன்மை செய்யும் பழங்களை சாப்பிடுவதும் நல்லது.

தினமும் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வரும் நாம்., நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால்., நமது உடல் புத்துணர்ச்சி அடைந்து நல்ல நிலையில் பராமரிக்கப்படும்.

நாவல்பழம் அல்லது நாவற்பழம் என்றும் அழைக்கப்படும் நாக்கை நாடியமட வைக்கும் பழம்..

இதனை சாப்பிட்ட பின்னர் நாவில் ஏற்படும் நிற மாற்றத்தினை நண்பர்களிடம் காண்பித்து சிறிது மகிழ்ந்தது 90கிட்ஸ்-ன் பொற்காலம் என்றே கூறலாம்..

நாவற்பழத்தில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நாவல்பழத்தில் இருக்கும் அதிகளவு கால்சியத்தின் காரணமாக., தினமும் ஒரு நாவற்பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாகும்.

நாவற்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 1., வைட்டமின் பி 2 மற்றும் வைட்டமின் பி 5 சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தாராளமாக வழங்குகிறது.

நமது வாய் முதல் குடல் வரை இருக்கும் அனைத்து புண்களையும் குணப்படுத்தி நமது உடலை பாதுகாக்கிறது. இதுமட்டுமல்லாது பசியின்மை பிரச்சனையால் அவதியுற்ற நபர்களுக்கு பசியை தூண்டி பசியின்மை பிரச்சனையை சரி செய்கிறது.

இதனைப்போன்று நாவற்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட் காரணமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்களை தடுக்கவும் உதவுகிறது. நாவற்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதுமானது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

liver issue cleared using navarpazham


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->