மதுரையில் நாய் கடித்து 32 பேர் பலி; ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி, 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிவித்துள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து  33 ஆயிரத்து  523 பேர் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மதுரை சத்தியசாய் நகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்கள் கேட்டு மனு அளித்தார். இதன் போதே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் மாதம் வரை நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள், நாய்கடியால் ரேபிஸ் நோயால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் கேட்கப்பட்டு இருந்தது.

இதற்கு ராஜாஜி மருத்துவமனை அளித்துள்ள பதிலில்,
கடந்த 2020 ஆண்டு 30, 168 பேர் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர் என்றும், அதில் ஒருவர் ரேபிஸ் நோயல் இறந்தார் எனவும்,  2021ம் ஆண்டு 29,100 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது, 

அத்துடன், 2022ம் ஆண்டு 30391 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் ரேபிஸ் நோயால் இறந்தனர்.

2023ம் ஆண்டு சிகிச்சை பெற்றதில் 23741 பேர் சிகிச்சை பெற்றதில், 11 பேர் ரேபிஸ் நோயால் இறந்தனர். 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 20123 பேர் சிகிச்சை பெற்றதில், 10 பேர் ரேபிஸ் நோயால் இறந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த 5 ஆண்டுகளில் மாத்திரம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1 லட்சத்தி 33 ஆயிரத்தி 523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்தனர் என RTI மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து RTI ஆர்வலர் மோகன் கூறுகையில்; 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிகளவிற்கு தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகின்றது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை சிகிச்சை அதிகளவிற்கு செய்ய வேண்டும்.

மேலும்,மாநகராட்சி தரப்பில் அதிகளவிற்கு கருத்தடை செய்வதாக கூறினாலும் கூட, தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீட்டு ஆய்வு நடத்த வேண்டும் எனவும் RTI ஆர்வலர் மோகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

32 people died due to dog bites in Madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->