சேற்றுப்புண் தொல்லை அதிகமாக இருக்கிறதா? - இதை மட்டும் அப்ளை பண்ணுங்க.!
medicines of seththu pun
அதிக நேரம் தண்ணீரில் கால்களை வைத்து நடப்பதும், ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும், சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமை உள்ளிட்டவற்றாலும் சேற்றுப்புண் வருகிறது.
இதனால், கடும் வலி, அரிப்பு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்வதற்கான ஒரு இயற்கை முறையை இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
மஞ்சள்
விளக்கெண்ணெய்
மருதாணி இலை
வேப்பிலை
செய்முறை:-
மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சளை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விளக்கெண்ணெய் விட்டு கெட்டியாக குழைத்து அதனை சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
இதேபோல், மஞ்சளுடன் மருதாணி இலை, வேப்பிலை போன்ற இலைகளை அரைத்து தடவினாலும் நல்ல பலன் காணலாம். சேற்றுப் புண்ணிற்கு மருந்து தடவும் முன்பு கால்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியமாகும்.