'சங்கடம் தரும் வாய் துர்நாற்றம்.. ' நிபுணர்கள் கூறும் காரணம் மற்றும் தீர்வு என்ன தெரியுமா?!
Mouth Odour Reasons And Tips to Prevent
ஒருவருக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த வாய் துர்நாற்றப் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது, அதை எப்படி தடுப்பது என்று நிபுணர்கள் சொல்வதை அறிந்து கொள்வோம்.
1. பல் துலக்குவதை தவிர்த்தல்:
இதை தவிர்த்தால் சாப்பிடும் உணவுத் துகள்கள் பல் இடுக்கில் சிக்கி பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து, மோசமான வாசனையை ஏற்படுத்தும்.
2. சர்க்கரை மற்றும் கார நெடியுள்ள உணவுகள் :
சர்க்கரை சேர்த்த உணவுகள் அனைத்தும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சில கார நெடியுள்ள உணவுகள் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
3. நீரிழப்பு :
நீரிழப்பினால் வாய் வறண்டு விடும். வாயில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வாயை சுத்தப்படுத்த உமிழ்நீர் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் இந்த இறந்த செல்கள் சிதைந்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
4. புகையிலைப் பொருட்கள் :
சிகரெட் புகைப்பது, புகையிலை மெல்லுவது ஆகியவை ஒரு கெட்ட வாசனையை ஏற்படுத்துவதோடு, வாயை வறட்சியாக்கி, உமிழ்நீர் சுரப்பைக் குறைக்கிறது.
5. உடல்நலப் பிரச்சினைகள் :
சைனஸ் தொண்டையின் பின்புறத்தில் பாக்டீரியாக்களை குவிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் குடலில் ஏற்படும் பிரச்சினைகளால் வயிற்றில் உள்ள அமிலங்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகளும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
6. பற்களில் ஏற்படும் பிரச்சினைகள் :
பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் ஈறு நோய், பற்குழிகள், ஈறுகளில் சீழ் பிடித்திருப்பது, ஈறு வீக்கம் ஆகியவை எல்லாம் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
எப்படி தடுக்கலாம்?
பற்களை சுகாதாரமாக வைத்திருப்பது, உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்து கொள்வது, உணவுப் பழக்கங்கள் மூலம் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
English Summary
Mouth Odour Reasons And Tips to Prevent