போலியோ சொட்டு மருந்து முகாம்! பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு நடத்தும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்து பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 26 வருடங்களாக அகில இந்திய அளவில் தீவிர கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்தத் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.68 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,647 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது. 

இதனால், இந்த வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச் சென்று, உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும்.

எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது.  

ஆகவே, அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் போட்டுக் கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது.

இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிலிருந்து அறவே ஒழிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் வரும் 27-ஆம் தேதியன்று நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் குழந்தைகளுக்கு அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.  

முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல.  இது ஒரு கூடுதல் தவணையாகும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்களின் குழந்தைகளுக்கும், சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.  சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும்  பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6,800 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
வரும் 27-ஆம் தேதியன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெறும் 
போலியோ சொட்டு மருந்து முகாம்களில்
5 வயதிற்குட்பட்ட 6.68 லட்சம் குழந்தைகளுக்கு
1,442 நிரந்தர மையங்கள்,
162 பேருந்து நிலையங்கள் மற்றும் இதர மையங்கள், 43
நடமாடும் மையங்கள் என
மொத்தம் 1,647 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும் 27-ஆம் தேதியன்று நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polio drops special camps


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->