கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சௌசௌ.! தெரிந்து கொள்ளுங்கள்.!
Pregnant women should eat chowchow
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சௌசௌ காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நரம்பில் ஏற்படும் பதற்றம் மற்றும் அதிகப்படியான உணர்ச்சி வயப்படுதல் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படும்.
ரத்த அழுத்தத்தை இது சமநிலையில் வைக்க உதவும். அதிகப்படியான நீர் கொண்டுள்ள இது மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கக்கூடியது. வயிறு குறித்த அனைத்து வியாதிகளையும் சரிப்படுத்தக் கூடிய தன்மை சவ்சவ்விற்க்கு இருக்கிறது.
சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவற்றில் இருக்கும் பிரச்சினைகளை நீக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்கள் வீங்கிவிடும் எனவே அவர்கள் நீர்ச்சத்து அதிகம் இருக்கும் சௌ சௌ உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும்.
சிலருக்கு சிறு வயதிலேயே வயதான தோற்றம் இருக்கும். இவர்கள் சௌசௌவ்வை உணவில் பயன்படுத்தினால் முகச் சுருக்கம் நீங்கி பொலிவு ஏற்படும். தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சௌசௌ பயன்படுத்தலாம்.
English Summary
Pregnant women should eat chowchow