மழைக் காலத்தில் 'கர்ப்பிணிகள்' தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை, எவை தெரியுமா?! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்கள் பல்வேறு விதமான உணவுகளை விரும்புவார்கள். ஆனால் மழைக் காலத்தில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்தும், உடல் உபாதைகளில் தங்களைக் காத்துக் கொள்ள கர்ப்பிணிகள் உண்ணக் கூடாத உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம். 

1. சமைக்காத உணவுகள் :

சமைக்காத அல்லது வெந்தும் வேகாத மாதிரியான உணவுகளை குறிப்பாக இறைச்சி, முட்டை ஆகியவற்றை கர்ப்பிணிகள் மழைக் காலத்தில் தவிர்க்க வேண்டும். இவற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகம். 

2. சாலையோரக் கடையில் விற்கும் உணவுகள் :

இவை சுகாதாரம் குறைவாக இருப்பதால் எளிதில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உண்டு. எனவே இவற்றையும் தவிர்க்க வேண்டும். 

3. கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள் :

கீரைகள் சத்தானவை தான். ஆனால் மழைக் காலங்களில் இவற்றில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் அதிகளவில் வளரும். அதேபோல் பச்சை காய்கறிகளும் உண்பது ஆபத்து. 

4. டீ மற்றும் காஃபி :

பொதுவாக அனைவருமே மழைக் காலத்தில் டீ, காஃபி குடிக்க விரும்புவார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு இதனால் இதயத் துடிப்பு மற்றும் BP அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இது குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். 

5. பதப்படுத்தப் படாத பால் மற்றும் பால் பொருட்கள் :

பதப்படுத்தப் படாத பால் மற்றும் பால் பொருட்களில் லிஸ்டீரியா என்ற பாக்டீரியாவானது அதிகளவில் உள்ளது. இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். 

செய்ய வேண்டியவை :

வீட்டிலேயே காய்ச்சிய தண்ணீரை மட்டுமே எப்போதும் பருக வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பிறகே உண்ண வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant Womens Should Avoid Eating These Foods During Monsoon


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->