உங்களுக்கு கால் ஆணி பிரச்சினை இருக்கா..? தீர்வு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!
Remedies for Foot Corn Problem
கால் ஆணி பிரச்சினை அனைவருக்கும் வாழ்நாளில் ஒருமுறையேனும் வந்திருக்கும். இதனால் தரையில் கால் வைக்க முடியாதளவு வலி ஏற்படும். இது பொதுவாக உடல் சூடு, கிருமித் தொற்று, அலர்ஜி உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்படுகிறது.
கால் ஆணியை குணப்படுத்துவதற்கான வீட்டு வைத்தியங்கள் குறித்து பாப்போம்.
1. கல் உப்பு : வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து, காலை அதில் மூழ்க வைக்க வேண்டும். கல் உப்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
2. மஞ்சள் : ஒரு ஸ்பூன் மஞ்சளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் செய்து, அதை கால் ஆணியில் தடவி, 2 - 3 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
3. தேயிலை மர எண்ணெய் : ஒரு பருத்தி துணியில் 2 - 3 சொட்டு தேயிலை மர எண்ணையை விட்டு, உங்கள் காலில் தடவி, இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு, காலையில் எழுந்ததும் கால்களை கழுவ வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.
4. வெங்காயம் : ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் வெங்காயச் சாறை சேர்த்து சேர்த்து, பிறகு அதில் உங்கள் கால்களை ஒரு 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்னர் ஏதேனும் ஒரு புட் க்ரீம் தடவலாம்.
5. கற்றாழை : ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த கற்றாழை ஜெல்லை கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு 2,3 முறை செய்யலாம்.
6. விளக்கெண்ணெய் : இந்த எண்ணையை காலில் தடவி இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 4, 5 முறை செய்யலாம்.
7. வைட்டமின் ஈ எண்ணெய் : இயற்கை மாய்ஸ்சரைசரான வைட்டமின் ஈ எண்ணெய், இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை காலில் தடவி, சாக்சால் மூடி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவேண்டும். இதை வாரத்திற்கு 4,5 முறை செய்யலாம்.
English Summary
Remedies for Foot Corn Problem