மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்; பிளே ஆப் செல்லுமா ராஜஸ்தான் அணி..?
Sanju Samson to captain the Rajasthan team again
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டியின் 18-வது சீசன் நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பலம்வாய்ந்த ஆர்சிபி அணியை சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், அவர் பேட்டிங் செய்வதற்கான உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராகவிளையாடினார். இதன் காரணமாக கடந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய தலைமையில் அணி 02 போட்டிகளில் சொதப்பிய நிலையில், சென்னை உடனான போட்டியில் வெற்றிப் பெற்றது.
சென்னைக்கு எதிரான போட்டி முடிந்த கையோடு தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள என்சிஏவிற்கு சென்றார்.

சஞ்சு சாம்சனுக்கு அங்கு நடந்த பரிசோதனையில் அவர் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த போட்டிகளில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் அவர் விளையாடுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Sanju Samson to captain the Rajasthan team again