உங்கள் கண்கள் பொலிவிழந்து காணப்படுகிறதா..? அப்போ இந்த 'டிப்ஸை' கடைபிடியுங்க..!! - Seithipunal
Seithipunal


கண்களை அழகாக, ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம். தினமும் நிறைய மஞ்சள் நிற பழங்கள் மற்றும் பச்சை நிறக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள சால்மன் உள்ளிட்ட மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

கண்களைச் சுற்றி வெளிப்புறத்தில் மோதிர விரலால் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவி, பின்னர் விளக்கெண்ணெய் கொண்டு கண்களைச் சுற்றி வெளிப்புறத்தில் வட்ட வடிவத்தில் மிக மென்மையாக மசாஜ் செய்து வந்தால் கண்கள் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். 

அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண்கள் மிகவும் சோர்வாக இருக்கும். இதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதோடு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். கண்கள் சோர்வடைவதால் தான் கருவளையம் ஏற்படுகிறது. 

இந்த கருவளையத்தைப் போக்க தூங்கும் நேரத்தில் வெள்ளரிக்காய் மற்றும் உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்துக் கண்களைச் சுற்றி வெளிப்புறத்தில் தடவி, பின்னர் ஒரு சுத்தமான துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். 

இதை வாரத்திற்கு 5 நாட்கள் செய்தாலே கருவளையம் நீங்கி கண்கள் புத்துணர்ச்சி பெற்று விடும். கணினியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை  கண்களை மூடி  திறப்பதோடு, 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். 

சோர்வான கண்கள் தான் பொலிவிழந்து காணப்படும். எனவே கண்களுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simple Natural Eye Care Tips For Fresh and Beauty Eyes


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->