வயதுக்கு மீறிய தோற்றமா.? அழகா இருக்கணும்னா, கோவத்தை குறைக்கணும்.. பளிச்சுனு ஆக, ஸ்மார்ட் ஐடியாக்கள்.! - Seithipunal
Seithipunal


அழகாக, இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவரது ஆசை. சிலருக்கு இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய தோற்றம் இருக்கும். இது நமக்கு அதிகப்படியான மன உளைச்சலை கொடுக்க கூடும். இது போன்ற முக சுருக்கம் மற்றும் வயது அதிகமான தோற்றத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இதற்கு அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கும் உணவுகளை எடுக்க வேண்டும். அதாவது, காய்கறிகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களை சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வாரத்திற்கும் நீராவி பிடிப்பதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

அத்துடன் மன பதட்டம், கோபம், கவலை இருப்பவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் வயதாவதை காண முடியும். இவர்கள் மன அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். இளமையாக இருக்க அதிகப்படியான கோபத்தை குறைத்து கொள்வதன் மூலம் முக சுருக்கங்கள் இல்லாமல் இருக்கலாம்.

சருமத்திற்கு ரோஸ் வாட்டர், கடலை மாவு, எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை கொண்டு அடிக்கடி முகத்தை தேய்த்து கழுவினால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி புத்துணர்வு ஏற்பட்டு அழகாக இருக்கும். அதுபோல மலச்சிக்கல் பிரச்சனைகள் முக அழகை பாதிக்கும். எனவே அதை சரி செய்ய நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடலாம்

தண்ணீர் அதிகமாக குடித்து சருமம் வறட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வறட்சி இல்லாமல் இருக்க இயற்கை மாஸ்சரைஸ்ரர்களான கத்தாழை ஜெல் ,தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் உள்ளிட்டவற்றை  பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smart ideas for olg age face problems


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->