வயிற்றுக்கடுப்பை குணப்படுத்த மிக எளிமையான வழி என்ன தெரியுமா..!
solution for stomach issue
சமையல் டிப்ஸ்:
புளிச்சக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்தவுடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டால் பன்னீர் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கடுமையான இருமல் குணமாகிவிடும்.
வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிய பின் அரைத்தால் சட்னி கசக்காமல் இருக்கும்.
தயிர் பச்சடி செய்யும்போது சிறிது ஓமவல்லி இலையைச் சேர்த்தால் நல்ல மணத்துடன் இருக்கும்.
முட்டைக்கோஸ் பொரியல் மீந்து விட்டால் வடை மாவு அல்லது அடை மாவுடன் கலந்து விட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தினமும் காலையில் 8-12 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமனில் மாற்றத்தை காணலாம்.
கொய்யா இலைகளை மென்று தின்றால் வயிற்றுப் போக்கு உடனடியாக நின்றுவிடும்.
English Summary
solution for stomach issue