குடும்பத்தை காப்பாத்துவதே கஷ்டம்.. அரசாங்கம் என்ன செய்யும்? - மதுரை ஆதீனம்
madurai adheenam press meet in nellai
அரசாங்கத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தடுக்க முடியாது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;-
"பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தை கட்டி காப்பாற்றுவதே கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது அரசாங்கம் என்ன செய்ய முடியும்? மத்திய அரசோ, அல்லது பிரதமரோ என்ன செய்வார்கள்?
ஒரு பழைய பாடலில், 'பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா, பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?' என்று வரிகள் வரும். தங்கள் குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது.
பிள்ளைகளை சமய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமுதாய ஒழுக்கம் உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும்." என்றுத் தெரிவித்தார்.
English Summary
madurai adheenam press meet in nellai