வயிறு எப்படி வலிச்சா.? எந்த உறுப்பில் பிரச்சினை.? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
Stomach pain and disease
பொதுவாக வயிறு வலி என்பது வெறும் வயிற்றை சார்ந்தது அல்ல. வயிற்றில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டை பொறுத்து தான் வயிற்று வலி ஏற்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு உறுப்புகளும் ஒரே மாதிரியான வலியை ஏற்படுத்துவதில்லை. இதில் வயிற்றை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாகவும், இடமிருந்து வலமாக மூன்று பகுதியாகவும் பிரிக்கலாம். அதாவது மேல், நடு, அடிப்பகுதி, இடது, நடு மற்றும் வலது பகுதி.
இதில் எந்தெந்த பக்கங்களில் வலி ஏற்பட்டால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேல் வயிறு இடது மூலை நடுவில் வலித்தால் அல்சர் இருக்க வாய்ப்புள்ளது.
நடு வயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் நீர்க்கடுப்பு மற்றும் கிட்னியில் கல் இருக்க வாய்ப்புள்ளது.
மேல் வயிறு வலது மூலையில் வலித்தால் ஈரலில் பிரச்சனை மற்றும் பித்தப்பையில் கல் இருக்க வாய்ப்புள்ளது.
அடிவயிறு வலது மூலை வலித்தால் அப்பன்டிசைடிஸ் இருக்க வாய்ப்புள்ளது.
அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
அடி வயிறு நடுவில் வலித்தால் சிறுநீர்ப்பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது.
நடு வயிறு நடுவில் தொப்புளை சுற்றி வலித்தால் ஃபுட் பாய்சான் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது .