மஞ்சளையும் மிளகையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் உருவாகும்? தெரிஞ்சிக்கலாம் வாங்க! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் காலகட்டத்தில் நமது உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இந்த நோய் தொற்று நமக்கு ஏற்படாமலிருக்க நம் உடல் தூய்மையாக வைத்துக் கொள்வதோடு ஆரோக்கியமான உணவுகளையும்  நமது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். நோய்க்கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்க என்னென்ன உணவுகளை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆக்சிஜன் அப்சார்பன்ஸ்  கெப்பாசிட்டி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகம், முருங்கைக் கீரை, மிளகு, மஞ்சல், பட்டை போன்றவற்றை தினமும் நம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எந்த ஒரு பொருளையுமே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நம் உடலுக்கு ஆபத்தாக அமையும். எடுத்துக்காட்டாக மஞ்சளை 5 சிட்டிகைக்கு அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரல் வீக்கம் ஏற்படும். அதனால் எந்த ஒரு பொருளையும் அளவோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் மற்றும் மிளகு இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது  நம் உடலுக்கு  பல நன்மைகளை கொடுக்கும். மஞ்சளில் இருக்கக்கூடிய  குர்குமின் மற்றும் மிளகில் இருக்கக்கூடிய பெப்பரின் ஆகியவை சமவிகிதத்தில் உணவில் கலக்கப்படும் போது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

இலவங்கப்பட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு உதவும். இந்தப் பட்டையை பொடி செய்து தேனீராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பட்டையை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவை தவிர வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு எலுமிச்சை போன்றவற்றிலும் உணவில் சேர்த்துக் கொள்வதோடு முருங்கைக்கீரை போன்றவற்றையும் தினமும் எடுத்துக் கொள்வது நம் உடலை நோய் கிருமிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

super food ingredients to keep up our immunity


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->