அந்த விஷயத்தில் ஜமாய்க்க இந்த உணவுகளை எடுத்துக்கோங்க! - Seithipunal
Seithipunal


லிபிடோ என்பது ஒரு மனிதரின்  ஒட்டுமொத்த பாலியல்  உந்துதலுக்கான வேட்கை  மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்கான விருப்பம் எஏற்படுவதாகும். இது உடலியல் உளவியல் மற்றும் சமூக காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

இந்த லிபிடோவை நாம் அதிகரிப்பதன் மூலம் நமது செக்ஸ் வாழ்க்கை இன்பமாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். என்னென்ன உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் நம் பாலியல் உணர்வுக்காண தூண்டுதலை  அதிகப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பொதுவாக கடல் உணவுகள் பாலியல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள் ஆகும். அதிலும் குறிப்பாக சிப்பிகள் நம் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் இருக்கும் துத்தநாகம் நம் பாலியல் உறுப்புகளுக்கு  அதிகமான ரத்த ஓட்டத்தினை கடத்துகிறது. மேலும் இது டெஸ்டோஸ்டிரான் அளவையும்  அதிகரிக்கிறது.

ஆடு மாடு மற்றும் பன்றியின் மாமிசம் ஆகியவை நம்மினுள் லிபிடோவை அதிகரிக்க உதவும் உணவுகளாகும். இவற்றில் அதிகப்படியான புரதம் உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள் நம் இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகமாக செலுத்துவதோடு உடலுக்கு நல்ல வலுவையும் கொடுப்பவை.

வால்நட், வேர்க்கடலை  சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் விதைகள்  ஆகியவை புரோட்டின் நல்ல கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3  ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ளன இவற்றை சாப்பிடுவதன் மூலம் நம் பாலியல் தூண்டலானது அதிகமாகும்.

ரெட் ஒயின் நம் பாலியல் ஆசைகளையும்  செயல்பாடுகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு அருமருந்தாகும். ஆனால் மிதமான அளவில் குடிக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாக குடித்தாலும் அதற்கு நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

To hike the sexual feelings have these foods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->