தீராத 'பேன்' தொல்லையா... ? கவலைய விடுங்க.. இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க..இனி 'பேன்' தொல்லையே இருக்காது.!!
Try These Remedies For Lice Problem
பேன்கள் தலை முடியில் மட்டுமல்லாது உடல் மற்றும் பாலுறுப்புகளில் உள்ள ரோமங்களில் கூட வளரக் கூடியவை. ஒரு பேனின் ஆயுள் 1 மாதம் தான். ஆனால் அது 1 நாளில் கிட்டத்தட்ட 10 முட்டைகள் இடும். இது எப்படி பரவுகிறது மற்றும் அதற்கான மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளவோம்.
எப்படி பரவுகிறது?
* தலையோடு தலை சேர்த்து வைக்கும்போது.
* ஒருவர் சீப்பை மற்றொருவர் பயன்படுத்தும் போது.
* ஒருவர் பயன்படுத்திய ஆடைகள், தலையணை உறை, போர்வை ஆகியவற்றை இன்னொருவர் பயன்படுத்தும் போது.
* ரோமங்கள் சுத்தமில்லாமல் இருந்தாலும் பரவும்.
எப்படி தடுப்பது?
* ஒருவர் பயன்படுத்திய பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. இல்லாவிட்டால் கொதிக்கும் நீரில் அலசி வெயிலில் உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
* பேனை முழுவதுமாக ஒழிக்க வேண்டுமென்றால் ரோமத்தை முற்றிலுமாக மொட்டையடித்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் ஒட்ட வெட்ட வேண்டும்.
* சீப்புகளை அழுக்கி நீக்கியே பயன்படுத்த வேண்டும்.
மருந்துகள் :
* தேங்காய் எண்ணையுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்து, பின்னர் அலசலாம்.
* லேசாக சூடாக்கிய தேங்காய் எண்ணையுடன் சிறிது வேப்பிலை சாறு மற்றும் கற்றாழையை சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
* வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் அதை தலைக்கு தடவி வரலாம்.
* கிராம்பை பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்கலாம்.
* துளசி, வேப்பிலை இரண்டையும் தனித் தனியாக காய வைத்து, பொடி செய்து, சம அளவில் எடுத்து கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி 10 நிமிடம் கழித்து அலசலாம்.
English Summary
Try These Remedies For Lice Problem