''கருவளையம்'' நீங்க இயற்கையான முறையில் எளிய டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


கருவளையம் என்பது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் வரக்கூடிய ஒன்று. அதற்கு முக்கிய காரணம் செல்போன், கணினி போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது தான். 

கணினி என்றால் பெண்கள் தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதனால் கருவளையம் பெண்களுக்கு அதிகமாக வருகிறது. 

அதை போல் தூக்கமின்மை, உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த கருவளையம் வரும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் சரி செய்யலாம். 

* முதலில் இரவு நேரத்தில் நன்கு தூங்க வேண்டும். தூங்கும் பொழுது கண்களை இருக்க மூடிக்கொள்ளாமல் லேசாக மூடிக்கொண்டு உறங்க வேண்டும். 

* அதேபோல் கண்களுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருப்பது நல்லது. புத்தகம் படிக்கும் பொழுது அதனை உற்று படித்தல் கண்களை சோர்வடைய செய்யும். அதனால் முடிந்த அளவுக்கு கண்களை கண்களுக்கு அதிக வேலை கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

* அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடலுக்கு தேவையான முக்கிய பொருளில் ஒன்றாக தண்ணீர் உள்ளது. அதனை உடலுக்கு சரியான அளவில் சேர்ப்பது நல்லது. 

* புதினா இலைகளை மசித்து அதன் சாற்றை கண்களுக்கு கீழ் தடவி பத்து முதல் 15 நிமிட கழித்து கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கருவளையம் நீங்கும். 

* வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி அதனை கண்களுக்கு மேல் வைத்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கருவளையம் மறையும். 

* உருளைக்கிழங்கை நறுக்கி கண்களுக்கு கீழ் தடவி வர கண்களில் உள்ள கருவளையம் மறைய தொடங்கும். இரண்டு ஸ்பூன் தக்காளி சாற்றை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து முகத்தில் கண்களுக்கு கீழ் தடவி வர கருவளையம் மறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

under eyes dark circle home remedies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->