சர்க்கரை நோயாளிகள் சாப்பாட்டில் இதையெல்லாம் சேர்த்தால் பலன் நிச்சயம்.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாக சர்க்கரை நோயினால் பல மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏகப்பட்ட அவதிக்கு மக்கள் ஆளாகின்றனர். சர்க்கரை நோய் வந்தாலே உணவு கட்டுப்பாடு மிக அவசியம். அவர்கள் அனைவரையும் போல எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்ள முடியாது. 

ஆகவே அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

இலவங்கப்பட்டையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. உங்களது டயட்டில் கண்டிப்பாக லவங்கப்பட்டை இருக்க வேண்டும். இது கொழுப்புகளை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும். 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக செயல்படும். இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருக்கின்றன. 

தயிரில் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் தன்மை இருக்கிறது. எனவே இது ஒரு சிறந்த உணவு. 

ஆளி விதைகள், பூசணிக்காய் விதை, சியா விதை உள்ளிட்டவையில் அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். 

கொண்டைக்கடலை, பீன்ஸ் உள்ளிட்டவற்றிலும் நார் சத்து ஊட்டச்சத்து இருக்கிறது. கோதுமை, குயினாவோ, ஓட்ஸ் உள்ளிட்ட தானியங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதால் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. 

அதுபோல நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். முட்டை அன்றாடம் சாப்பிட வேண்டும். இது புரோட்டின் சத்தை நமக்கு கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

use these food to control sugar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->