உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா? வெள்ளைப் பூசணியை வைத்து கோடை காலத்தில் இதை செய்யுங்கள்....
Want to improve your health Use white pumpkin and do this in the summer
வெள்ளைப் பூசணி ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் குணம் கொண்டவை. இதில் நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் தீங்கு விளைவிக்கும் ரசாயணங்களின் விளைவைக் கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனையில் இருந்து நம்மைப் பாதுகாப்பதில் வெள்ளைப் பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு வெள்ளைப் பூசணி சிறந்த ஒரு மருந்தாக விளங்குகிறது.

வெள்ளைப் பூசணி:
இதனை வைத்து கோடைக் காலங்களில் ஜூஸ் போட்டுக் கொடுத்தால் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. உடல் சூட்டைத் தணிக்கும் மேலும் பெண்களுக்குக் கர்ப்பப்பை உஷ்ணத்தைக் குறைக்கும்.இதைத்தொடர்ந்து வெள்ளைப் பூசணியை வைத்து வீட்டில் ஆரோக்கியமான உணவையும் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இதனைத் திருஷ்டி கழிக்க உபயோகிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்தவை. இதனை எதிர்மறைச் சக்தியாக அந்தக் காலத்தில் உபயோகித்து வந்தார்கள். உடல்களில் உள்ள அணைத்து உறுப்புகளுக்கும் அருமருந்தாகிறது. கல்லீரலுக்கும், நுரையீரலுக்கும், இதயத்திற்கும் மிக நல்லது இந்த வெள்ளைப் பூசணி.
ஜூஸ்:
மேலும் இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்கிறது. இது தூக்கமின்மைக்கு ஒரு முக்கிய மருந்தாகும். மிக முக்கியமாகக் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு இந்த வெள்ளைப் பூசணியைக் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் போட்டு பருகி வந்தால் இரத்த அழுத்தமானது சமநிலைக்கு வந்துவிடும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்குக் காலை உடல் வலிக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். மலச்சிங்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு என நம் முன்னோர்கள் அன்றே தெரிவித்தனர்.
English Summary
Want to improve your health Use white pumpkin and do this in the summer