முடிவு எடுக்கும் உரிமை தங்கை காளியம்மாளுக்கு உண்டு - சீமான் பேட்டி!
NTK Seeman Kaliyammal Issue DMK ADMK TVK
தூத்துக்குடியில் நாதக நிர்வாகி காளியம்மாள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கட்சி பெயர் இல்லாமல் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம், வேறு கட்சிக்கு செல்லலாமா? வேண்டாமா என முடிவு எடுக்கும் உரிமை தங்கை காளியம்மாளுக்கு உண்டு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் மேலும் தெரிவிக்கையில், "எங்கள் கட்சியில் முழு சுதந்திரம் உள்ளது. இருக்க விரும்பினால் இயங்கலாம், வேண்டுமென்றால் வெளியேறலாம். இது ஜனநாயக அமைப்பு.
தங்கை காளியம்மாள் முதலில் சமூக செயற்பாட்டாளராக இருந்தார். அவரை அழைத்துவ ந்ததும் நான்தான். அவர்களுக்கும், அனைவருக்கும் முழு சுதந்திரம் உள்ளது.
வருபவர்களை வரவேற்கிறோம், செல்ல விரும்புவோருக்கு நன்றி, வாழ்த்து சொல்கிறோம். இது எங்கள் கொள்கை. கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் திடீரென்று கடிதம் எழுதி விட்டு போகிறார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், மும்மொழி கொள்கை ஏன் இருக்கிறது? எம் மொழி ஏன் புறக்கணிக்கப்படுகிறது? கல்வி என்பது மாநில உரிமை. மருத்துவம், கல்வி, எல்லா வரியையும் மத்திய அரசு கைப்பற்றினால், மாநிலத்திற்கே என்ன முக்கியத்துவம்? இதற்காகத்தானா நாம் சுதந்திரம் பெற்றோம்?
ஒரு மொழியை திணிப்பதால் நாடு துண்டாடப்படுகிறது. இதுவே உண்மையான பிரிவினைவாதம். நிதி தரவில்லை என்று புலம்புவதற்குப் பதிலாக, என் மாநிலத்திலிருந்து உனக்கு ஒரு ரூபாய் வரி வராது என்று சொல்ல முடியாதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
NTK Seeman Kaliyammal Issue DMK ADMK TVK