இந்த சூப்பரான பழங்களை சாப்பிட்டே உடல் எடையை குறைக்கலாம்.!
weight loss tips using fruits diet
உடலில் உள்ள கொழுப்புகளை சில எளிய சுவையான பழங்களால் குணப்படுத்த முடியும் என்றால் நம்ப முடியாது தான். ஆனால், அது உண்மை. கீழ்காணும் பழங்களை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால், நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
ஆப்பிளில் பெக்டின் சத்து அதிகமாக இருக்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை கொல்கிறது. பெக்டின் ஒரு வகை நார்ச்சத்து. இதனால், கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
பேரிக்காய் ஆப்பிள் போலவே எளிதாக கிடைக்கக்கூடியது. இதில், அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையும். இந்த பேரிக்காய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பெரி பழம் பருவ காலங்களில் அதிகமாக கிடைக்கும். இதில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. கொழுப்பின் ஆக்சிஜன் ஏற்றத்தை இது தடுக்கும். எனவே இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது. அத்துடன் இந்த பழம் சரும பொலிவிற்கும் உதவும்.
ஆரஞ்சு பழம் சிட்ரஸ் வகைகளை சார்ந்தது. நார்ச்சத்து அதிகம் இருக்கும் இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும். இதனால் உடல் எடை குறைந்து உடலும், இதயமும் சுறுசுறுப்பாக இயங்கும்.
அவகேடா பழம் இந்தியாவில் மிக காஸ்ட்லியான பழமாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள ஒலிக் அமிலம் கெட்ட கொழுப்பை குறைக்கும். பெரும்பாலான மக்களுக்கு இது விருப்பமான ஒரு பழமாகும். இதை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடலில் ஆரோக்கியம் மேம்படும்.
English Summary
weight loss tips using fruits diet