தும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக் கொள்வது ஏன்.? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.!
Why sneeze comes eyes are closed
தும்மல் என்பது மூக்கினுள் நுழைந்துள்ள எரிச்சல் தரும் பொருளொன்றை வெளியேற்றும் முயற்சியாகும். அந்நியப்பொருளால் மூக்கினுள் உண்டாகும் மெய்க்கூச்ச உணர்ச்சி (tickle) மூளையிலுள்ள தும்மை மையத்துக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது. உடனடியாக பல்வேறு தசைத்தொகுதிகளுக்குச் சிக்கலான கட்டளைகள் ஒரு தொடர்ச்சியில் பிறப்பிக்கப்படுகின்றன.
வயிற்றுத் தசைகள், நெஞ்சுத் தசைகள், வயிற்று மென்தகடு, குரவளைத் தசைநார்கள், தொண்டைப் பின்தசைகள், கண்ணிமைத் தசைகள் அசைக்கப்படுவதால் தும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக் கொள்கிறது. இறுதியாக அந்த அந்நியப்பொருளும் வெளியேற்றப்படுகிறது. அது வெளியேற்றப்படும் வேகம் 100mph ஆகும்.
ஆனால் இங்கே இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. என்னவென்றால் ஒருவருக்கு ஒளித்தூண்டலால் வரும் தும்மல் குறைபாடு ஏற்படுகிறது. இது மரபணுச் சார்ந்தது. பிரகாசமான ஒளி அவர்களில் தும்மலைத் தூண்டுகிறது. இதனை ஒளி கிளர்த்தும் தும்மல் (photic sneeze) என்று அழைக்கிறார்கள்.
English Summary
Why sneeze comes eyes are closed