இந்தியா-பூடான் எல்லையில் விபத்து - ராணுவ வீரர் பலி, 4 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா-பூடான் எல்லையில் நடந்த வாகன விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா-பூடான் எல்லையில் உள்ள தமுல்பூர் அருகே இன்று இந்திய ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து விபத்தில் காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு சிகிச்சைக்காக ராணுவ தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கவுகாத்தியில் உள்ள பாதுகாப்புத்துறை பிஆர்ஓ தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவ வாகனம் நரேங்கி ராணுவ கான்ட் பகுதியில் இருந்து சென்றபோது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 Army jawan died in accident near India Bhutan border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->