பெங்களூரு விமான நிலையம்: ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல்.! மலேசியாவை சேர்ந்த 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மலேசியாவை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதில் மூன்று பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மூன்று பேரும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூபாய் 1.33 கோடி மதிப்பிலான இரண்டு கிலோ 280 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்த மூன்று பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 crore 33 lakhs worth gold seized at Bangalore airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->