திரிபுரா: ரூ.1.5 கோடி மதிப்புள்ள மரிஜுவானா போதை பொருள் பறிமுதல்.! ஓட்டுநர் கைது.! - Seithipunal
Seithipunal


திரிபுராவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 386 கிலோ மரிஜுவானா எனப்படும் கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், அசாம் ரைபிள்ஸ், திரிபுரா போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் ராதாநகர் பட்டாலியன் மற்றும் திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள முங்கியகாமி போலீசாருடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது வாகனத்தில் கடத்திய ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 386 கிலோ மரிஜுவானா எனப்படும் கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாலன் ராய் என்ற டிரைவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட மரிஜுவானா போதைப்பொருள் முங்கியகாமி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, இந்த போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 crore worth Marijuana Drugs seized in Tripura


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->